கோயம்புத்தூர், ஆகஸ்ட் 29 : கோயம்புத்தூர் நவ இந்தியா பகுதியில் அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள் வெடித்து விபத்து
கோவையின் முக்கிய பகுதியான நவஇந்தியா அருகே தொழிலாலர்கள் தங்கியிருந்த இடத்தில் 7 சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட தகர வீடுகள் சேதமைட்ததாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் பணிக்கு சென்ற போது தீ விபத்து ஏற்பட்டதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து சிலிண்டர்களில் இருந்து எரிவாயு வெளியேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் 32 சிலிண்டர்களை வெடிக்காமல் மீட்டுள்ளனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுதும் அடர்ந்த புக மண்டலமாகக் காட்சி அளித்தது. ஒரே நேரத்தில் 7 சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்து கோயம்புத்தூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு சென்ற பீளமேடு தீயணைப்பு துறையினர் தீ விபத்தை கட்டுப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த மற்ற சிலிண்டர்களை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த டீக்கடையில் கேஎஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆகஸ்ட் 11, 2026 அன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் 10 மீட்டர் அளவிற்கு பரவிய தீ ஜுவாலையால் அந்த பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர்.

