Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!

AI மூலம் முடி வெட்டும் தொழிலுக்கும் ஆபத்து?.. இணையத்தில் வைரலாகும் வீடியொ!

TV9 Tamil 2 days ago
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக உள்ள அம்சம் தான் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence). தற்போதைய காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இல்லாத துறைகளையே பார்க்க முடியாது. பல துறைகளை செயற்கை நுண்ணறிவு அம்சம் தனது கைவசம் வைத்துள்ளது. இந்த நிலையில் தான், முடி வெட்டும் தொழிலும் மனிதர்களின் கைகளை விட்டு சென்றுவிடுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்தும், அந்த சம்பவம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

முடி வெட்டும் தொழிலை கைப்பற்றும் செயற்கை நுண்ணறிவு?

பொறியியல் முதல் சேவை வரை என பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான், பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் மனிதர்களின் வேலைகள் பரிபோகும் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் மிகவும் பேசுபொருளாக உள்ளது. நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. பெண் பைக் ரைடரை விரட்டிச் சென்று மோதிய கார்.. பதற வைக்கும் வீடியோ!

ஹர்ஷ் கோயங்கா பதிவிட்ட வீடியோ

ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஒருவர் முடி வெட்டுகிறார். அவர் கைகளில் வழக்கம் போல கத்தி, சீப்பு ஆகியவற்றை வைத்துள்ளார். ஆனால், அவர் தனது தலையில் கேமரா ஒன்றை மாட்டி வைத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு அம்சத்திற்கு பயிற்சி வழங்க அந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது. Viral Video : ஒரு கடைசி முத்தம்.. பணி ஓய்வின் போது பேருந்து ஓட்டுநர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் அனைத்து துறைகளிலும் மனிதர்கள் வேலையை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil