இவர்கள் காதலித்து திருமணம் செய்துவது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள்தான் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாகவே பல நூறு படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரும் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அமர்களம் என்ற படத்தின் மூலமாக நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் நடிக்கும் போதே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர்களின் காதல் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுத்துவந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இன்ஸ்டாகிராமில் தனக்கு என்று ஒரு பக்கத்தை உருவாக்கினார். எந்த சமூக வலைதள பக்கத்திலும் நடிகர் அஜித் குமார் இல்லாத காரணத்தால் ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பக்கம் அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இணையத்தில் வைரலாகும் அஜித் குமார் மற்றும் ஷாலினியின் கியூட் வீடியோ:
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் சமீபத்திய வீடியோவில் நடிகர் அஜித்குமார் பிரியாணி சமைக்கிறார். அப்போது நான் சொன்ன மாதிரிதான செய்கிறார் அஜித் என்று ஷாலினி கேட்டதும் அவர்களின் நண்பர்கள் சிரிக்கின்றனார். மேலும் செல்ஃபி எடுக்கும் போது ஷாலினி அஜித்தை இங்க பார் அஜித் என்று கூறும் போது அஜித் எங்க என்று கேட்கும் கியூட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ... Salman Khan: சல்மான்கானுடன் புது படத்தில் கைகோர்த்த வாரிசு பட இயக்குநர் - ஷூட்டிங் எப்போது தெரியுமா?இணையத்தில் வைரலாகும் வீடியோ: