Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அஜித் - ஷாலினி திருமண நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள். வைரலாகும் புகைப்படம்

அஜித் - ஷாலினி திருமண நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள். வைரலாகும் புகைப்படம்

TV9 Tamil 2 months ago
மிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
சினிமாவில் அஜித்தின் வளர்ச்சி என்பது அனைவராலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. அதன்படி நடிகர் அஜித் குமார் சினிமவில் எந்த விதமான பின்புலனும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் இந்த இடத்திற்கு வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அஜித் ரசிகர்கள் அவரை கொண்டாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடிப்பது மட்டும் இன்றி கார் ரேஸிங் பணியிலும் பிசியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வேலையில் எந்த அளவிற்கு நடிகர் அஜித் குமார் கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு அவரது குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் அஜித் குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி அஜித் குமார் தம்பதிக்கு 26-வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

அஜித் - ஷாலினி திருமண நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள்:

அஜித் குமார் ஷாலினி தம்பதியின் 26-வது திருமண நாள் கொண்டாட்டம் நேற்று நெறுங்கிய நண்பர்கள் உடன் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் எடுத்தப் புகைப்படத்தை அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது. ... உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… 26-வது திருமண நாளை கொண்டாடும் அஜித் குமார் - ஷாலினி

சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil