Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமலுக்கு வந்தது புதிய 2026 EPFO.. முக்கிய மாற்றங்கள் என்ன என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

அமலுக்கு வந்தது புதிய 2026 EPFO.. முக்கிய மாற்றங்கள் என்ன என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

TV9 Tamil 1 month ago
ந்தியாவில் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றுவதற்காகவும் 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO - Employee Provident Fund Organization) . இந்த அமைப்பின் மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த அமைப்பு 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த மாற்றங்களை ஊழியர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது.

அமலுக்கு வந்த 2026 ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம்

இந்த 2026 ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதேசமயம் ஏற்கனவே அமலில் இருந்த சில அம்சங்கள் மாற்றம் செய்யப்படாமல் தொடர்கின்றன.

12 சதவீதம் பிஎஃப் பங்களிப்பு

ஒரு ஊழியரின் சம்பளம் மற்றும் நிறுவணம் சார்பில் பங்களிக்கப்படும் 12 சதவீதம் அப்படியே உள்ளது. இந்த நிலையில் புதிய விதியின் படி, சட்டப்படியான ஊதிய வரம்பு ரூ.15,000-க்கு 12 சதவீதம் என பிஎஃப் பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஒரு மாதத்திற்கு அந்த ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு ரூ.1,800 ஆக உள்ளது. EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்!

ரூ.1,800-க்கு தானாக முன்வந்து செய்யப்படும் பங்களிப்பு

முன்னதாக, ஊழியர்கள் தங்களது நிறுவனத்தின் கொள்கை அல்லது ஒப்பந்தத்தின்படி, ரூ.15,000-க்கும் அதிகமான சம்பளத்திற்கு பிஎஃப் பங்களிப்பை மேற்கொண்டு வந்தனர். இதில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிய விதியின் படி, பிஎஃப் கணக்கில் ரூ.1,800-க்கு மேல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பங்களிப்பும் தானாக முன்வந்து (Voluntary Contribution) மேற்கொள்ளப்படும் பங்களிப்பாக கருதப்படும். Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?

ரூ.1,800-க்கு மேல் பங்களிப்பு மேற்கொள்ளலாம்

அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வுகால சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால், மாதாந்திர பிஎஃப் கணக்கில் ரூ.1,800-க்கு மேல் பங்களிப்பு செய்யலாம். இந்த சூழலில் ஊழியர்கள் அளிக்கும் பங்களிப்புக்கு நிகராக நிறுவனமும் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என புதிய விதி கூறுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil