தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் கடந்த 2025-ம் ஆண்டு சினிமாவில் இரண்டு புது அவதாரங்களை எடுத்தார்.
அதில் ஒன்று தயாரிப்பாளர் மற்றொன்று இயக்குநர். அதன்படி நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் படங்களும் இயக்கத்தில் படமும் தொடர்ந்து உருவாகி வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து நடிப்பில் உருவாகும் படங்கள் மட்டும் இன்றி அவர் இயக்கத்தில் உருவாகும் படம் தொடர்பான அப்டேட்டும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்குநர் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2025-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் தற்போது புது வீடியோ ஒன்று வெளியாக வைரலாகி வருகின்றது.
அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வைரலாகும் பிடிஎஸ் வீடியோ:
அதன்படி நேற்று மே 1-ம் தேதி உலகம் முழுவதும் உழைப்பார்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அன் ஆர்டினரி மேன் படத்தில் இருந்து பிடிஎஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் காட்சிகளாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ரவி மோகன் மற்றும் யோகி பாபு படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடுவதும் காட்டப்பட்டு இருந்தது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் - ஊர்வசி.. புது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு!
