இந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். அதன்படி தமிழ் சினிமாவில் வெளியான கோகுலம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன நடிகர் ஜெயராம் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயராம் நடிப்பில் வெளியான புருஷ லக்ஷனம், முறை மாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை. தெனாலி, பஞ்ச தந்திரம், சரோஜா, துப்பாக்கி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு, கோட், ரெட்ரோ மற்றும் கர என்று பலப் படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் ஜெயராம் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பஞ்சதந்திரம் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த இரண்டு ஜாம்பவான்கள் இல்லாமல் பஞ்சதந்திரம் 2 எப்படி உருவாகும்:
பலர் தன்னிடம் வந்து பஞ்சதந்திரம் 2 படத்தை எடுக்க சொல்லி கமல் சாரிடம் சொல்லுங்க என்று கேட்கிறார்கள். கமல் சார்கிட்ட போய் சொல்லலாம். ஆனால் அந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு எங்கு போறது அவர்கள் இல்லாமல் எப்படி பஞ்சதந்திரம் எடுக்க முடியும் என்று நடிகர்கள் நாகேஷ் மற்றும் கிரேஸ் மோகன் இருவரையும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Bigg Boss Julie: கிட்னி தருவதாக கூறி ரூ 15 லட்சம் மோசடி..? கண்ணீருடன் பிக்பாஸ் ஜூலி!இணையத்தில் வைரலாகும் நடிகர் ஜெயராம் பேச்சு: