தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
முன்பணத்தை திருப்பி அளிக்க நினைக்கும் சிம்பு... முரண்டு பிடிக்கும் ஐசரி கணேஷ்:
வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் ஆகியோருக்கிடையேயான கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்த 'கொரோனா குமார்' படத்திற்காக, முன்பணமாகப் பெற்றிருந்த 5 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க சிலம்பரசன் முன்வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், அப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட நஷ்டத்தைக் காரணம் காட்டி, தயாரிப்பாளர் தரப்பு 7.5 கோடி ரூபாயைக் கோரியது. இந்நிலையில், 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடர வேண்டுமானால், சிலம்பரசன் 7.5 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ... கமல் சாரோட அந்த படத்தைப் பாத்துட்டு 15 நாள் எனக்கு தூக்கம் வரல - சேரன்இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

