அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதலீடு செய்வதற்கு முன்பு யோசிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னதாக யோசிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.அதிக வட்டிக்காக மட்டும் முதலீடு செய்ய கூடாது
பலரும் 8 சதவீதத்திற்கு மேல் வட்டி உள்ளவை சிறப்பான திட்டங்கள் என நினைத்து முதலீடு செய்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி முதலீடு செய்யக்கூடாது. காரணம், இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை. திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அவற்றின் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இனி ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் பணம் செலுத்த முடியாது - வெளியான அறிவிப்புதேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது
அரசு பல்வேறு கால அளவீடுகளை கொண்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக குறுகிய கால தேவைகளுக்காக நிலையான வைப்பு நிதி திட்டம் (FD - Fixed Deposit Scheme), தொடர் வைப்பு நிதி திட்டம் (RD - Recurring Deposit Scheme) உள்ளிட்டவற்றை செயல்படுத்துகிறது. இதுவே நீண்ட கால தேவைகள், பிள்ளைகளில் எதிர்கால தேவைகளுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY - Sukanya Samriddhi Yojana) உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. எனவே அவற்றை தேர்வு செய்து முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். வேலையில் இருந்து விலக போறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்கபண தேவையை அறிந்துக்கொண்டு முதலீடு செய்யுங்கள்
உங்களது பொருளாதார சூழல் மற்றும் பண தேவையை அறிந்துக்கொண்டு முதலீடு செய்யுங்கள். காரணம், சில திட்டங்களில், முடிவு காலத்திற்கு முன்னதாக பணத்தை எடுப்பதற்கு அனுமதி இல்லை. எனவே திட்டம் முடியும் வரை உங்களால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றால் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும்.
