Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தை பார்த்து பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தை பார்த்து பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி வருகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் கான் சிட்டி. நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் கடந்த 26-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், சாக்ஷி வைத்யா, நந்த கோபால், VTV கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, மதன்குமார் தட்சிணாமூர்த்தி, பொன்வண்ணன், ரகு எசக்கி, சதானந்த் மற்றும் லல்லு என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

கான் சிட்டி படத்தை பார்த்து பாராட்டிய லோகேஷ் கனகராஜ்:

இந்த நிலையில் திரையரங்குகளில் வரவேற்பைப் பெறும் கான் சிட்டி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பார்த்து பாராட்டியுள்ளார். அது தொடர்பாக நடிகர் அர்ஜுன் தாஸ் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் எனது சகோதரரும், வழிகாட்டியும், என் குடும்பத்தில் ஒருவருமானவரை 'கான் சிட்டி' (Con City) படத்தைப் பார்க்க வைத்தேன். அவருக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது; குடும்பப் பார்வையாளர்கள் என் படத்தைப் பார்க்கத் திரையரங்குகளுக்கு வருவதைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, "என்னை நீ பெருமைப்பட வைத்துள்ளாய்" என்று அவர் கூறியதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதைவிடச் சிறந்ததொரு விஷயம் வேறென்ன இருக்க முடியும்? எனக்குத் திரையுலகில் முதல் வாய்ப்பை வழங்கியவர் இன்று இத்தகைய வார்த்தைகளைக் கூறுவது, எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. மிக்க நன்றி மச்சி, இயக்குனர் லோகேஷ். இந்தப் படம் உங்களுக்கானது; இது உங்கள் காரணமாகவே சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார். ... இந்த போட்டோவில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? கிரிக்கெட் டூ நடிகரானவர் இவர்!

நடிகர் அர்ஜுன் தாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil