தமிழ் சினிமாவில் வில்லன், நாயகன் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது சிறபான நடிப்பின் மூலம் ரசிகர்கள்டை தன்வசம் படுத்தியவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்களில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்து இருந்தார். இதில் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாகவும், பாம் படத்தில் கதையின் நாயகனாகவும், கும்கி 2 படத்தில் சிறப்பு கதாப்பாத்திரத்திலும் நடித்து இருந்தார். இந்த மூன்று படங்களிலும் நடிகர் அர்ஜுன் தாஸின் கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் தெலுங்கில் நடித்தப் படம் தே கால் ஹிம் ஓஜி. இதில் நடிகர் பவன் கல்யாண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் அர்ஜுன் தாஸிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே போல தெலுங்கு சினிமாவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகி உள்ள ஒன்ஸ் மோர் படத்தில் இருந்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியாகும் மற்றொரு சிங்கிள் - எப்போது தெரியுமா?
இந்த ஒன்ஸ் மோர் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை விக்னேஷ் ஸ்ரீ காந்த் எழுதி இயக்கி உள்ளார். படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வருகின்ற 3-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு படத்தில் இருந்து மற்றும் ஒரு சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகின்றது. ... இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா? தமிழில் முதல் படத்திலே STR-க்கு ஜோடி!ஒன்ஸ் மோர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

