நடிகர் ரஜினிகாந்த் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதிகாலை தொடங்கும் உடற்பயிற்சியும் மன அமைதிக்கான தியானமும்
நடிகர் ரஜினிகாந்தின் அன்றாட வாழ்வியல் முறை மிகத் துல்லியமான ஒழுக்கத்தைக் கொண்டது. தினமும் அதிகாலை 5 மணிக்கே தனது நாளைத் தொடங்கும் அவர், எழுந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தீவிரமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும் நாள்களிலும் இந்த வழக்கத்தை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. உடல் ஆரோக்கியத்துடன் மன அமைதியைப் பேண யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கும் அவர் தனது நாளின் தொடக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கிறார்.அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய பின்னணி
தொடக்கக் காலங்களில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டு வந்த ரஜினிகாந்த், கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட சில உடல்நலக் காரணங்களால் முழுமையான சைவ உணவு முறைக்கு மாறினார். தற்போது தமிழக பாரம்பரிய முறையிலான சைவ உணவுகளையே அவர் பெரிதும் விரும்புகிறார். குறிப்பாக, புளிப்புச் சுவை நிறைந்த கெட்டியான வத்தக்குழம்பு, மணத்தக்காளி வத்தல் சேர்த்த உணவுகள் மற்றும் சூடான சாதம் ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவையாகும். : Deepika Padukone: தீபிகா படுகோனின் ஹெல்தி மார்னிங் ரொட்டின் இதுதான்.. அப்படி என்ன செய்வார் தெரியுமா?படப்பிடிப்புத் தளங்களிலும் பின்பற்றப்படும் கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு
படப்பிடிப்பு நேரங்களில் எவ்வளவு பெரிய விருந்து ஏற்பாடுகள் நடந்தாலும், ரஜினிகாந்த் தனது உணவில் எப்போதுமே அளவுக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பார். மதிய உணவாக எளிமையான அரிசி சாதத்துடன் சாம்பார், ரசம் மற்றும் காய்கறிப் பொரியல்களைச் சேர்த்துக்கொள்கிறார். அதுமட்டுமின்றி, இயற்கையான இனிப்புச் சுவை கொண்ட மாதுளை போன்ற சத்தான பழச்சாறுகளையும் தனது உணவுப் பட்டியலில் அவர் விரும்பி சேர்த்துக் கொள்கிறார்.பால் மற்றும் சர்க்கரை வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் ரகசியம்
தனது இளமைத் தோற்றத்திற்கும் சீரான உடல் எடவுக்கும் காரணமாக அவர் சில முக்கிய உணவுப் பொருட்களைத் தன் அருகில் சேர்ப்பது கூட இல்லை. 40 வயதைக் கடந்ததில் இருந்தே சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்ட அவர், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், நெய், வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைத் தொடுவதேயில்லை. இந்த உணவுக் கட்டுப்பாடுகளும் முறையான ஓய்வும் மட்டுமே இத்தனை வயதிலும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாக அவரை இயங்க வைக்கிறது.
