ஐபிஎல் 2026 சீசனுக்கு (IPL 2026) இடையில் இந்தியாவை சேர்ந்த 19 வயதான பூஜா சிங், இன்று அதாவது 2026 மே 29ம் தேதி நடைபெற்ற 22வது ஆசிய அண்டர் 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
ஹாங்காங்கில் நிகழ்ந்த தனது இந்த வரலாற்றுச் சாதனையில், பூஜா 14 ஆண்டுகள் பழமையான ஒரு சாதனையையும் முறியடித்தார். அதாவது, பூஜா சிங் (Pooja Singh) 1.93 மீட்டர் உயரம் தாண்டி, 2012-ல் சஹானா குமாரி படைத்திருந்த 14 ஆண்டுகள் பழமையான சீனியர் தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு சஹானா 1.92 மீட்டர் உயரம் தாண்டி இந்தச் சாதனையை வைத்திருந்தார். இதன் மூலம், சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பூஜா பெற்றார். ரஷீத் கான் இல்லை.. இந்திய தொடருக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
தேசிய சாதனை முறியடிப்பு:
19 வயதே ஆன பூஜா சிங் முதலில் 1.91 மீட்டர் தாண்டி, 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர், அதைவிடப் பெரிய தாண்டுதலின் மூலம், பெண்களுக்கான சீனியர் தேசிய சாதனையை முறியடித்தார். 1.93 மீட்டர் தாண்டியதன் மூலம், பூஜா சிங் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதி அளவான 1.92 மீட்டரையும் கடந்தார். இருப்பினும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இறுதித் தகுதிப் போட்டியான ஃபெடரேஷன் கோப்பை ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு விலக்கு அளிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மே மாதம் வாட்டி வதைக்கும் வெயில்..! செப்டம்பர் மாதத்தில் மாறுகிறதா ஐபிஎல்..? வெளியான தகவல்!
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உற்சாக பாராட்டு:
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பூஜா சிங்கை உற்சாகப்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியதாவது, "சிறந்த தடகள வீராங்கனையான பூஜா சிங், ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அபாரமாகச் செயல்பட்டார். அவர் தாண்டிய 1.93 மீட்டர் தேசிய சாதனையை முறியடித்தது. அவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்!" என பதிவிட்டிருந்தார்.

