இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் டிராகன் (Dragon).
தலைவர் 173 படத்தில் மிஷ்கின் நடிப்பது குறித்து வைரலாகும் பதிவு:
தலைவர் 173 படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து:
தலைவர் 173 படத்தை இயக்குநர் சுந்தர் சி, டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி போன்ற இயக்குநர்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்கள் இப்படத்திலிருந்து சில காரணங்களால் விலகியிருந்தனர். மேலும் தற்போது ரஜினிக்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கதையை கூறியுள்ளதாகவும், ரஜினிகாந்த் அந்த கதையை முழுமையாக முடித்து அதன்பிறகு அதை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளாராம். கோலிவுட் முதல் டோலிவுட் வரை… இந்த வாரம் தென்னிந்திய சினிமாவில் புது வரவுகளின் லிஸ்ட் இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணியை முடித்த அஸ்வத், சூப்பர் ஸ்டாரிடம் கதை ஸ்கிரிப்டை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் ஓகே சொன்ன பிறகே, தலைவர் 173 படத்தின் இயக்குநராக தன்னை அறிவிக்கவேண்டும் என அஸ்வத் மாரிமுத்து கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ரஜினிகாந்த் கதையை படித்துவிட்டு விரைவில் அதை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது சுயசரிதையை எழுதிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
