கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
D55 படத்தை கைவிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்:
இந்த நிலையில் நடிகர் தனுஷின் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் சினிமாஸ் தயாரிப்பதாக இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கூறி படத்தில் இருந்து விலகியதாக கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பாக தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ... ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… என்ன நடந்தது?இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

