பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, சமீபத்தில் கேரளம் மாநிலம் தளிப்பரம்பாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜராஜேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்.
ஆனந்த் அம்பானி[/caption] பின்னர், அர்ச்சகர்கள் அவருக்குக் கோயில் முழுவதையும் சுற்றிக் காட்டினர். இருப்பினும், கோயிலின் கிழக்குக் கோபுரம் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாகப் பாழடைந்த நிலையில் இருப்பதை அனந்த் அம்பானி அறிந்துகொண்டார். அனந்த் அம்பானி[/caption] கடந்த 25 ஆண்டுகளாகக் கோயில் அதிகாரிகள் இந்தப் பழமையான கட்டமைப்பைப் புனரமைக்க முயன்று வந்தபோதிலும், நிதிப் பற்றாக்குறையால் பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. அவர் உடனடியாகப் பதிலளித்து, கோபுரத்தைப் புனரமைப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அனந்த் அம்பானி[/caption] இதற்காக, கோயிலைப் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ. 12 கோடி மாபெரும் நன்கொடை சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புனரமைப்புப் பணிகளுக்காக ரூ. 3 கோடி காசோலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி, கோபுரம் கட்டுவதற்கும், பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

