மழைக்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலில் ஐஸ் வாட்டர் அருந்துவது உடலின் உள் வெப்பநிலையைத் திடீரெனக் குறைத்து சோர்வை ஏற்படுத்துகிறது.
மழைக்காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பது ஆபத்தா?
குளுமையான வானிலை நிலவும் மழைக்காலத்தில், வழக்கத்திற்கு மாறாகச் சிலர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட ஐஸ் வாட்டரைக் குடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். வெளிப்புறச் சூழலில் ஏற்கெனவே ஈரப்பதமும் குளிர்ச்சியும் நிலவும் போது, ஐஸ் வாட்டர் அருந்துவது உடலின் உள் வெப்பநிலையைத் திடீரெனக் குறைத்து இயல்பு நிலையைப் பாதிக்கும். இது உடலில் உள்ள ஆற்றலைத் தேவையின்றி விரயமாக்கி, நாள் முழுவதும் ஒருவிதச் சோர்வு நிலையை உருவாக்கும் எனக் எச்சரிக்கப்படுகிறது.செரிமான அமைப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்
ஐஸ் வாட்டர் அருந்தும்போது, அது வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களை உடனடியாகச் சுருங்கச் செய்கிறது. இதனால் உணவைச் செரிமானம் செய்யும் இயல்புச் செயல்முறை மெதுவாகி, அஜீரணம், வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் தோன்றக்கூடும். குறிப்பாக உணவருந்திய உடனே மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதால், செரிமானக் கோளாறுகள் தீவிரமடைய வாய்ப்புள்ளது.சுவாசப் பாதை மற்றும் தொண்டைப் பாதிப்புகள்
மழைக்காலத்தில் காற்றில் பரவும் நுண்ணுயிரிகளால் இயல்பாகவே தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகம். அந்நேரத்தில் ஐஸ் வாட்டர் அருந்துவது தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய திசுக்களைப் பாதித்து, சளி, இருமல், மூக்கடைப்பு மற்றும் தொண்டை வலி போன்ற சுவாசப் சார்ந்த பிரச்சனைகளைத் தூண்டிவிடும். மேலும், குளிர்ந்த நீர் தலைப்பகுதியில் உள்ள நரம்புகளைத் திடீரெனத் தூண்டுவதால் தலைவலியையும், பற்களில் கடுமையான கூச்சத்தையும் ஏற்படுத்தலாம். : மழைக்கால தலைக்குளியல்: தினமும் குளிப்பது நல்லதா?நோய் எதிர்ப்புச் சக்தியும் பாதுகாப்பு வழிகளும்
குளிர் காலத்தில் உடலின் இயல்பு வெப்பநிலையைத் தக்கவைக்க நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது. அதற்கு எதிராக மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பது, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறனைத் தளரச் செய்து காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மழை மற்றும் குளிர் காலங்களில் ஐஸ் வாட்டரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதோ அல்லது மிதமான வெப்பநிலையில் உள்ள தண்ணீரைக் குடிப்பதோ உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
