Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பருவமழையில் இந்த உணவுகளை தவிர்க்காவிட்டால் ஆபத்துதான்..!

பருவமழையில் இந்த உணவுகளை தவிர்க்காவிட்டால் ஆபத்துதான்..!

TV9 Tamil 2 weeks ago
ழைக்காலம் தொடங்கும் போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவினாலும், இக்காலகட்டத்தில் பல்வேறு தொற்றுநோய்களும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வேகமாகப் பெருகுகின்றன. எனவே, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் மழைக்காலத்தில் சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியமாகிறது.

வீதியோர உணவுகள் மற்றும் சாட் வகைகள்

மழைக்காலத்தில் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானிபூரி, சமோசா மற்றும் வெட்டப்பட்ட பழங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் வைக்கப்படும் இந்த உணவுகளில் ஈக்கள் மொய்ப்பதாலும், அசுத்தமான நீர் பயன்படுத்தப்படுவதாலும் டைபாய்டு, காலரா மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக உணவுகள் விரைவாகக் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்

பொதுவாகக் கீரைகளும் பச்சைக் காய்கறிகளும் உடலுக்கு நல்லது என்றாலும், பருவமழைக் காலத்தில் அவற்றைப் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை. மண்ணில் தேங்கும் மழைநீர் மற்றும் ஈரப்பதம் காரணமாகக் கீரைகளின் இடுக்குகளிலும், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், புழுக்கள் மற்றும் கிருமிகள் தங்கியிருக்கலாம். இவற்றைச் சரியாகக் கழுவாமல் சமைத்துச் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் குடல் புழுத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடல் உணவுகள் மற்றும் மீன்கள்

மழைக்காலம் என்பது மீன்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாகும். இக்காலத்தில் கிடைக்கும் மீன்கள் மற்றும் கடல் உணவுகள் புதியதாக இருக்காது. மேலும், கடல் நீரில் ஏற்படும் மாற்றங்களால் அவற்றில் நச்சுத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்தச் சமயத்தில் மீன் மற்றும் இதர கடல் உணவுகளை உட்கொள்வது கடுமையான ஒவ்வாமை (Allergy) மற்றும் உணவு நச்சுத்தன்மையை (Food Poisoning) உண்டாக்கலாம். : ஜிம்மை நிறுத்தினால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன?

வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்

குளிர்ந்த மழைக்காலத்தில் சூடாக பஜ்ஜி, வடை மற்றும் சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். ஆனால், காற்றில் உள்ள ஈரப்பதத்தால் இந்த நாட்களில் நம் உடலின் செரிமானத் திறன் (Metabolism) மிகவும் மந்தமாக இருக்கும். இத்தகைய சூழலில், அதிக கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகளை உட்கொள்ளும்போது அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற கோளாறுகள் எளிதில் ஏற்படும்.

கார்பனேட்டட் பானங்கள் மற்றும் குளிர்ச்சியான உணவுகள்

மழைக்காலத்தில் குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் செயற்கை இனிப்புகள் கலந்த கார்பனேட்டட் பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை உடலின் வெப்பநிலையைக் குறைப்பதுடன், தொண்டையில் தொற்று (Throat Infection) ஏற்படுவதற்கும், சளி மற்றும் இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் தீவிரமடைவதற்கும் வழிவகுக்கும். அதற்குப் பதிலாக, நன்கு காய்ச்சிய வெதுவெதுப்பான நீர், மூலிகை தேநீர் அல்லது சூடான சூப் வகைகளை அருந்துவது உடலுக்குப் புத்துணர்ச்சியையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் தரும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil