ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு (Iran and America) இடையே நிலவி வந்த போரில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது.
மே 15 முதல் விலை உயர்த்த தொடங்க எண்ணெய் நிறுவனங்கள்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் - அமெரிக்கா இடையேன் பிப்ரவரி 28, 2026 முதல் சண்டை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடும் தட்டுப்பாடு நிலவியபோதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமலே வைத்திருந்தன. இந்த நிலையில் தான், மே 15, 2026 முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் - அமைச்சர் பதில்
பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. என்வே, இப்போது அவர்கள் அவற்றை தான் சுத்திகரிப்பு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் சரிவில் உள்ள நிலையில், இந்த குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு மையங்களை வந்தடையும்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
