Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

TV9 Tamil 1 day ago
Petrol, Diesel Price Today: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, 5 நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையேயும் வாகன ஓட்டிகளிலிடேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உள்ளூர் வரி விதிப்புகளின் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை நடைமுறைப்படுத்தி வருகின்றன.  பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு..
பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்!

பெட்ரோல், டீசல் இன்றைய விலை:

அதன்படி, சென்னயில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.104.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.11க்கு விற்கப்படுகிறது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதையான 'ஹார்முஸ் நீரிணை' பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடங்கல்களுமே உலகளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரிக்க முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், பெட்ரோல், டீசல் அல்லது எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் திட்டம் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான உள்ளூர் வாட் (VAT) வரி மற்றும் டீலர் கமிஷன் மாறுபடுவதால், ஒவ்வொரு நகரத்திற்கும் சில்லறை விற்பனை விலையில் சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்தத் தொடர் விலை உயர்வு போக்குவரத்துச் செலவுகளை அதிகரிப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என்பதால் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil