Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து. "டெய்ல் ஸ்ட்ரைக்" குறித்து பரபரப்பு தகவல்!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து. "டெய்ல் ஸ்ட்ரைக்" குறித்து பரபரப்பு தகவல்!

TV9 Tamil 3 months ago
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு ஏ12651 என்ற ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானமானது இன்று வியாழக்கிழமை காலை ( மே 21- ஆம் தேதி) புதுடெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது.
இதில், 181 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பெங்களூர் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியது. ஆனால், இந்த விபத்தில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், டெல்லி - பெங்களூரு ஏர் இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அனைத்து பயணிகளும் விமான பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக செய்தி தொடர்பாளர் மேலும் உறுதி தெரிவித்தார்.

விமானம் விபத்தில் சிக்க காரணம் என்ன

விமானம் தரையிறங்கும் இடத்திற்கு அருகில் இருந்தபோது அதன் பின்னால் ஏற்படும் காற்று சுழற்சியால் விமானம் அதிர்ந்தது என்றும் இதைத் தொடர்ந்து, விமானி மீண்டும் விமானத்தை மேலே பறக்கும் முயற்சியே மேற்கொள்ள முடிவு செய்தார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த முயற்சியின் போது விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் மற்றொரு பெரிய வகை விமானம் புறப்பட தயாரான நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மத்திய அமைச்சர்கள் வெயிட்டிங்.. இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தும் பிரதமர் மோடி

பெங்களூர் டூ டெல்லி விமானம் ரத்து

மேலும் விரிவான ஆய்வுக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடைமுறைகளின் படி இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார். இந்த விபத்து சம்பவம் காரணமாக பெங்களூரில் இருந்து டெல்லிக்கு திரும்பும் a12652 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க இருந்த விமான பயணிகள் அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தரைப்படை குழுக்கள் செய்து வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

விமானம் புறப்படும் போது ஏற்படும் நிகழ்வு

அமெரிக்காவின் பெடரல் ஏவியேசன் நிர்வாகம் கூற்றின்படி மேக் டர்போலன்ஸ் என்பது ஒரு விமானம் மேல் நோக்கிய விசையை உருவாக்கும் போது விமானத்துக்கு பின்னால் எதிர் திசையில் சுழலும் இரண்டு சுழல்கள் உருவாகும். இந்த சூழல்களின் வலிமை மற்றும் கால அளவு மற்றும் திசை ஆகியவற்றின் காரணமாக மேல்நோக்கிய விசையை உருவாக்கும் விமானத்தில் இருந்து வரும் வேக் டர்போலன்ஸ் எதிரே வரும் விமானங்களை விபத்தில் சிக்க வைக்கும் என்று கூறப்படுகிறது.  திடீர் ட்ரெண்டான கரப்பான்பூச்சி கட்சி.. சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவாளர்கள்.. என்ன நடந்தது?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil