Dailyhunt
பெரம்பூரில் போட்டியிடும் திலகபாமா.. வேட்புமனு தாக்கலின் போது தராசுடன் சென்றதால் பரபரப்பு..

பெரம்பூரில் போட்டியிடும் திலகபாமா.. வேட்புமனு தாக்கலின் போது தராசுடன் சென்றதால் பரபரப்பு..

TV9 Tamil 2 weeks ago

சென்னை, ஏப்ரல் 2, 2026: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் பாமக பொருளாளர் திலகமாமா போட்டியிடுகிறார்.

அதற்கான வேட்புமனு தாக்கலை இன்று மேற்கொண்டார். பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, கையில் தராசுடன் சென்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கൊപ്പം, தங்கள் தொகுதிகளில் பிரச்சாரங்களையும் தொடங்கி உள்ளனர்.

பெரம்பூரில் போட்டியிடும் திலகபாமா:

இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை இதொ..

இந்த நிலையில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் திலகமாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிட்டு வந்த திலகமாமா, முதல் முறையாக சென்னையில் களமிறங்குகிறார்.

வேட்புமனு தாக்கலின் போது தராசுடன் சென்ற திலகபாமா:

இந்த சூழலில், இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, கையில் தராசை ஏந்தியபடி சென்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதி கோரி அவர் கையில் தராசு ஏந்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

 திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!

அதேபோல், 'ஸ்டார் தொகுதி எது?' என்ற கேள்விக்கு, 'ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து, அவர்கள் நன்றாக இருந்தால் அதுவே என்னைப் பொருத்தவரை ஸ்டார் தொகுதி,' என அவர் குறிப்பிட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil