Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெத்லகேம் குடும்ப யூனிட் படத்திலிருந்து வெளியானது மாந்த்ரிகம் லிரிக்கள் வீடியோ

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்திலிருந்து வெளியானது மாந்த்ரிகம் லிரிக்கள் வீடியோ

TV9 Tamil 9 hrs ago
லையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள மொழி மக்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதிலும் குறிப்பாக கடந்த சிலப் படங்கள் நடிகர் நிவின் பாலிக்கு அதிக அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். இவர் தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. இந்த நிலையில் அடுத்தடுத்தும் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியானது மாந்த்ரிகம் லிரிக்கள் வீடியோ:

இந்த நிலையில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் இருந்து மாந்த்ரிகம் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... Mamitha Baiju: தென்னிந்தியாவின் சென்சேஷன்.. ஒரே மாதத்தில் வெளியாகும் மமிதாவின் இரு படங்கள்!

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil