தங்களது பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து, அதற்கான லாபத்தை பெற வேண்டும் என நினைக்கும் நபர்கள் முதலில் தேர்வு செய்வது பிபிஎஃப் (PPF - Public Provident Fund) திட்டத்தை தான்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பழைய வரி முறையில் EEE வரி சலுகை வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டு தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டுக்குமே வரி சலுகை வழங்கப்படும். நீண்ட கால முதலீடாக பார்க்கப்படும் இந்த திட்டம், ஓய்வு காலத்திற்கு ஏற்ற மிக சிறந்த முதலீடாகவும் உள்ளது. டிரெண்டாகும் ஒரு வார விதி - ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் - என்ன செய்ய வேண்டும்?பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது தெரிந்துக்கொள்ள வேண்டியது
பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும் பலரும் இந்த 5 ஆம் தேதி விதி குறித்து தெரிந்துக்கொள்ளாமலே முதலீடு செய்கின்றனர். அதாவது பிபிஎஃப் திட்ட விதிகளை பொருத்தவரை, வட்டி கணக்கிடப்படும்போது அந்த மாதத்தின் 5 ஆம் தேதி முதல் இறுதி வரை உள்ள குறைந்தபட்ச தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, நீங்கள் பிபிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் ரூ.5,000 முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால் அதனை ஏப்ரல் 04 ஆம் தேதிக்குள்ளாக முதலீடு செய்ய வேண்டும். 72 மணி நேரத்திற்குள் இதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல்.. FASTag புதிய ரூல்ஸ்! காரணம், 04 ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால் ஏப்ரல் மாதத்திற்கான வட்டி, மொத்த தொகையான ரூ.1.5 லட்சத்திற்கு கணக்கிடப்படும். இதையே ஏப்ரல் 05 ஆம் தேதிக்கு பிறகு முதலீடு செய்தால் பழைய இருப்பான ரூ.1 லட்சத்திற்கு மட்டுமே வழங்கப்படும். எனவே பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ முதலீடு செய்கிறீர்கள் என்றால் 05 ஆம் தேதிக்குள் செய்வது சிறப்பானதாக இருக்கும்.
