விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss).
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறும் சின்னத்திரை போட்டியாளர்கள்:
விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் 4 பேர் பங்குபெறுகிறார்களாம். நடிகைகள் ஜனனி அசோக்குமார், ஃபரீனா ஆசாத், குக் வித் கோமாளி புகழ், உமைர் லதீப் மற்றும் நடிகர் புவி அரசு போன்ற சின்னத்திரை பிரபலகங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதாக பெயர் அடிபடுகிறது. இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்களா அல்லது இல்லையா? என உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் சீரியலியல் களமிறங்கும் கேப்ரியெல்லா.. அட அந்த ஹீரோவுக்கு ஜோடியாகவா?பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்து வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:
புதிய முறையில் உருவாகும் பிக் பாஸ் சீசன் 10 :
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் திறமையாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பங்குபெறுவர்கள். ஆனால், இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சாதாரண சாமான்யர்களும் பங்குபெறுகிறார்களாம். ஆகையால் மற்ற பிக் பாஸ் சீசன்களை ஒப்பிடும்போது இந்த பிக் பாஸ் சீசன் 10 வித்தியாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
