பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிக்பாஸில் தரமான சம்பவம் செய்த விஜய் சேதுபதி:
கடந்த 8-வது சீசன் முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரம் வரும் போது இந்த வாரம் போட்டியாளர்கள் செய்த தவறை வெளிப்படையாக பேசி சுட்டிக்காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவர் அதனை மேலோட்டமாக பேசிவிட்டு சென்றுவிடுவார். இது மக்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை கொடுத்துவந்தந்து. இந்த நிலையில் நேற்று வீக் எண்ட் எபிசோடில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல கடந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே நடைப்பெற்ற சலசலப்பு மற்றும் முகம் சுழிக்கும் விதமாக நடந்துக்கொண்ட செயல் என அனைத்தையும் விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசினார். மேலும் வன்முறையில் ஈடுபட்ட கம்ருதின் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படும் என்று நேரடியாக தெரிவித்தார். இந்த எபிசோடைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் தரமான சம்பவத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்று ஞாயிறு எபிசோடிலும் தொடர உள்ளது தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோ மூலம் தெரிகிறது. ... ராயன் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது - நடிகர் விஷ்ணு விஷால்பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

