இவரது நடிப்பில் சினத்திரையில் வெளியான சீரியல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் மிகப்பெரிய ஸ்டாராக இருந்த நடிகர் பிரஜின் வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு முதல் வெள்ளித்தையில் நடிகராக நடிக்கத் தொடங்கிய நடிகர் பிரஜின் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவரது நடிப்பில் திரைத்துரையில் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றிக் கிடைக்காத நிலையில் நடிகர் பிரஜின் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரஜின் மீண்டும் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் பிரஜின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரஜின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி:
அதன்படி நடிகர் பிரஜின் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஊருக்கு ரெண்டு ஊதாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் யோகேஸ்வரன் மைனர் இந்தப் படத்தை இயக்க உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நாளை 05-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பிரஜின் உடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர். ... சாம்ராஜியம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு ஆனா, அந்த க்ரீடாத அணிய தகுதி யாருக்கு இருக்கு? - இணையத்தில் வைரலாகும் லெகசி தொடரின் டீசர்நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: