Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.. டெல்லியில் மருத்துவர்கள் சாதனை!

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.. டெல்லியில் மருத்துவர்கள் சாதனை!

TV9 Tamil 3 weeks ago
புதுடெல்லி, மே 06 : பீகார் (Bihar) மாநிலம், பாட்னாவை (Patna) சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதாவது, 33 வயதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். அனைத்து கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பரிசோதனை செய்யப்படுவதை போலவே இந்த பெண்ணுக்கும் கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தான் தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

அதாவது பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு இதயத்தில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது ஒரு அரிய, பிறவி இதய குறைப்பாடு என கூறியுள்ளனர். அது நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜன் செறிந்த ரத்தத்தை வழக்கமான முறையில் இதயத்துக்கு திருப்பாத ஒரு நிலையை உருவாக்கும். இந்த குறைபாட்டுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை என்றால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆர்ட் ஆஃப் லிவிங் 45வது ஆண்டு விழா: பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை மருத்துவர்கள் கூறியபடி குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு அருகே வசித்துள்ளனர். இதனை தொடர்ந்து கர்ப்பத்தில் இருக்கும்போது குழந்தையின் நிலை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இறுதியாக குழந்தை பிறக்கும் நாள் வந்துள்ளது. குழந்தை பிறந்த நிலையில், மூச்சு விடுவதற்கே கடும் சிரமங்களை சந்திக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்… பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து விஜய் கோரிக்கை!

திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை

இந்த நிலையில், துலியும் தாமதிக்காமல் மருத்துவர்கள் குழந்தைக்கான சிகிச்சையை தொடங்கியுள்ளனர். அதாவது மருத்துவமனையின் இதய நிபுணர் குழு, திறந்த நிலை இதய அவசர சிகிச்சையில் ஈடுபட்டது. இந்த சிகிச்சையின்போது மருத்துவர்கள், ஆக்சிஜன் செறிந்த ரத்த ஓட்டத்தை இதயத்தின் இடது பக்கத்துக்கு திருப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் குழந்தை மீட்கப்பட்டது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil