இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்து, தற்போது நடிகராக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan).
பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி:
அந்த நேர்காணலில் அர்ச்சனா பேசுகையில், "பிரதீப் ரங்கநாதனின் புது படத்திற்காக நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம், அவர் அப்படத்தை இயக்கி, அவரே ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தொடர்பான கதையை எழுதுவதில் தீவிரமாக இருக்கிறார்" என அதில் அவர் கூறியிருந்தார். டி 55 படத்தில் இதுவரை இல்லாத புது தோற்றத்தில் நடிகை சாய் பல்லவி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசிய வீடியோ:
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக புது அவதாரம்:
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளாராக புதிய படத்தை தயாரிக்கவுள்ளாராம். இதை அவரின் உதவி இயக்குநர் இயக்கும் நிலையில், மமிதா பைஜூ இதில் லீட் நாயகியாக நடிக்கிறாராம். மேலும் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது இந்த புதிய திரைப்படத்தின் புரோமோ ஷூட்டிங் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் புரோமோவுடன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு பிரதீப் ரங்கநாதன் முன்னேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
