Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பூஜையுடன் தொடங்கியது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங். வைரலாகும் போட்டோஸ்!

பூஜையுடன் தொடங்கியது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங். வைரலாகும் போட்டோஸ்!

TV9 Tamil 2 months ago
மிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மிகவும் ஜாலியான படங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் இந்த 2026- ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் ஜீவா. அதன்படி நடிகர் ஜீவாவிற்கு பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து தற்போது ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பூஜையுடன் தொடங்கியது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங்:

இந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது உருவாக உள்ள படத்திற்கு தற்போது தகப்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று 20-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை இயக்குனர் ரா வெங்கட் எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ... தமிழ்நாட்டில் மட்டும் ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கிள் இத்தனை கோடிகள் வசூலா? வைரலாகும் தகவல்

நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil