தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கடந்த 2002-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய நடிகர் தனுஷ் தொடர்ந்து 24 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது 54-வது படமான கர படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனது 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் தனுஷ் 55 படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியானது மேட் இன் கொரியா படத்தின் டீசர்தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

