Dailyhunt
பூர்வீக சொத்து ஏதுமில்லை.. துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பூர்வீக சொத்து ஏதுமில்லை.. துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

TV9 Tamil 1 week ago

சென்னை, ஏப்ரல் 2, 2026: வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை ..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்:

இன்று வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடி என்றும், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்றும், பூர்வீக சொத்து எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திமுக-பாஜகவை நம்பாதீர்கள்; என்னை 100% நம்புங்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் - திருச்சியில் விஜய் பரப்புரை..

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையிருப்பில் ரூ.50,000 மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் கையிருப்பில் ரூ.75,000 உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவரிடம் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான டிஃபென்டர் கார் மற்றும் இன்னோவா கார் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவியிடம் 1600 கிராம் தங்க நகைகள்:

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.14.56 லட்சமும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.8.44 லட்சமும் அவரது பெயரில் வைப்பு தொகையாக உள்ளது. அதே சமயத்தில், உதயநிதி ஸ்டாலினிடம் தங்கம் அல்லது வைர நகைகள் எதுவும் இல்லை என்றும், அவரது மனைவி கிருத்திகாவிடம் 1600 கிராம் தங்கம் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா வாய்ப்புகள் மூலம் கிடைக்கும் வருவாய், வட்டி வருவாய் மற்றும் எம்.எல்.ஏ. ஊதியம் ஆகியவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருவாய் ஆதாரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil