Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Budget Smartphones : ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Budget Smartphones : ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

TV9 Tamil 3 weeks ago
ற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக ஸ்மார்ட்போன் (Smartphone) மாறிவிட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்வி, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஸ்மார்ட்போன் இல்லை என்றால் சராசரி மனிதர்களை போல செயல்பட முடியாத நிலையும் உல்ளது. இந்த நிலையில், ரூ.15,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் (Budget Smartphones) குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.15,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் - லிஸ்ட் இதோ!

சமீப காலமாக ஸ்மார்ட்போன்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் வாங்குவது பலருக்கும் சவால் மிகுந்ததாக உள்ளது. இந்த நிலையில், ரூ.15,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மோட்டோ ஜி35 பவர் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் பவர் சீரீஸில் சில மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஒன்றுதான் இந்த மோட்டோ ஜி35 பவர் ஸ்மார்ட்போன் (Moto G35 Power Smartphone). 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 ஆக உள்ளது. WhatsApp : விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வாட்ஸ்அப்பின் Username அம்சம்.. எப்படி செயல்படும்?

ஒப்போ கே14 எக்ஸ் ஸ்மார்ட்போன்

இந்த ஓப்போ கே 14 எக்ஸ் ஸ்மார்ட்போனில் (Oppo K 14x Smartphone) 6.75 இன்ச் HD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்சிடி பேனலை கொண்டுள்ளது. தினசரி பயன்பாடு மற்றும் 3டி கேம் விளையாடுவதற்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,249 ஆக உள்ளது.

ஓப்போ கே 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

இந்த ஓப்போ கே 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் (Oppo K 14x 5G Smartphone) 6.75 இன்ச் எல்சிடி திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6300 மீடியாடெக் டைமன்சிட்டி பிராசசரை கொண்டுள்ளது. 6500 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழைக்காலத்திலும் ஏசி யூஸ் பண்ணுவீங்களா? இதை கண்டிப்பா கவனிங்க!

டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன்

இந்த டென்கோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் (Techno Spark Go 3 Smartphone) 6.74 இன்ச் எச்டி திரை அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil