Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள்  - உதயநிதி ஸ்டாலின் கருத்து

புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின் கருத்து

TV9 Tamil 3 weeks ago
சென்னை, மே 4 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 108 தொகுதிகளில் புதிதாக களமிறஹ்கிய தவெக முன்னிலை வகிப்பது அரசியல் அரங்கில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த நிலையில் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் தவெக தற்போது 108 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

'தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம்'

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் வெற்றிச் சான்றிதழை வாங்க வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்; புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

 

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil