இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது தான் ரேஷன் கார்டு. காரணம், ரேஷன் கார்டு மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு மாநிய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்திய பொதுமக்கள் பசி, பட்டினி இன்றி இருக்க இந்த திட்டம் பின்பற்றப்படுகிறது.

திருமணமாகி தனியாக குடும்பம் நடத்தும் தம்பதிகள் தனியாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

புதியதாக திருமணமான தம்பதிகள் இணையதளம் வாயிலாகவே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 15 முதல் 30 நாட்களில் பயனர்களின் கைகளில் ரேஷன் கார்டு கிடைத்துவிடும். இத்தைய நடைமுறையில் அமலில் இருக்கும் நிலையில், தான் புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு தமிழகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. இதனால், சில செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு அதாவது மே 05, 2026-க்கு பிறகு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

