Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?

TV9 Tamil 3 weeks ago
லக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் (Telegram) உள்ளது. இந்த செயலியில் அதிக நபர்களை கொண்ட பெரிய குழுக்களை நிர்வகிக்கலாம், பெரிய ஃபைல்களை பரிமாற்றம் செய்யலாம்.
இவ்வாறு பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டு இருப்பதன் காரணமாக பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். என்னதான் டெலிகிராம் செயலிக்கு இத்தகைய சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், இந்த செயலி குறித்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வருவது தொடர்கதையாக உள்ளது.

டெலிகிராம் செயலிக்கு மீண்டும் ஒரு ஆபத்து

குறிப்பாக இந்தியாவில் சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நீட் மறுதேர்வின் போது சில நாட்கள் இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கம் செய்யப்பட்டு இருந்தது. இத்தகைய தொடர் சவால்களை டெலிகிராம் செயலி எதிர்க்கொண்டு வரும் நிலையில், தற்போது அந்த செயலிக்கு மீண்டும் ஒரு ஆபத்து எழுந்துள்ளது. கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! - எப்படி தெரியுமா?

பயங்கரவாத செயல்களுக்கு உடந்தை - டெலிகிராம் நிறுவனர் மீது குற்றச்சாட்டு

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (Telegram Founder Pavel Durov) மீது ரஷ்ய பாதுகாப்பு அமைப்பான (FSB - Federal Security Service) பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, பாவெல் துரோவ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக அது கூறியுள்ளது. குறிப்பாக, டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பான செய்தி பரிமாற்ற அம்சத்தை பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்றவும், ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தியதாக ரஷ்ய உளவு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்! இத்தகைய பகிரங்க குற்றச்சாட்டை ரஷ்யா பாவெல் துரோவ் மீது வைத்துள்ள நிலையில், அவர் மீது சர்வதே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு டெக் உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil