Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dhanush: மகன் யாத்ரா ஹீரோவாக நடிக்கவுள்ளாரா? கேள்விகளுக்கு தனுஷ் கொடுத்த பதில்!

Dhanush: மகன் யாத்ரா ஹீரோவாக நடிக்கவுள்ளாரா? கேள்விகளுக்கு தனுஷ் கொடுத்த பதில்!

TV9 Tamil 3 weeks ago
டிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் 2026ம் ஆண்டில் முதலில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கர(Kara).
இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இப்படத்தை இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ்ஆக்ஷன் வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த ஜோடியானது இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறலாம். இந்த கர படத்தில் தனுஷ் ஒரு திருடனாக நடித்திருக்கும் நிலையில், அவர் எதற்காக திருடுகிறார் என சுவாரஸ்ய திருப்பங்களுடன் படம் அமைந்துள்ளது. அந்த வகையில் இதன் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய தனுஷிடம், அவரின் மூத்த மகன் யாத்ரா (Yatra Raja) சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்? என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு தெளிவான விளக்கத்தை தனுஷ் கொடுத்துள்ளார்.
கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டரில் போடாததற்கு இதுதான் காரணம் - ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு

தனது மகன் யாத்ரா ஹீரோவாக சினிமா நுழைவு குறித்து தனுஷ் பேச்சு:

அதில் பேசிய தனுஷ், "நான் வறுமையின் காரணமாக 16 வயதில் நடிப்புத் துறைக்கு வந்தேன். என் மகன் யாத்ராவிற்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது, நான் இன்னும் அவரை ஒரு குழந்தையாகவே பார்க்கிறேன். அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இப்போதே சொல்வது மிக முன்கூட்டியதாகும்" என அதில் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்ப்பன தகவல் ரசிகர்களிடையே பரவிவருகிறது. பட்டாஸ் பட நடிகைக்கு திருமணம்.. காதலனை கரம்பிடித்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா!

யாத்ராவின் சினிமா நுழைவு பற்றி தனுஷ் பேசியிருந்த பதிவு:

சில வாரங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தனுஷின் மகன் யாத்ரா சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்றும், அவர் அதற்காக தன்னை தயார்படுத்திவருகிறார். தனது தந்தையை போலவே அவரும், சிக்ஸ் பேக் வைத்து, ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதுகுறித்து தனுஷ் விரைவில் தெரிவிப்பார் என அவர் கூறியிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் பேசிய தனுஷ், தனது மகன் எப்போது ஹீரோவாக நுழைவார் என்பது பற்றி தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் சினிமாவில் ஹீரோவாக நுழைவதியும் அவர் மறுக்கவில்லை. தனது மகனின் விருப்பம் என்பதுபோல் தனுஷ் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil