விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) சிறப்பாக மக்கள் மத்தியில் வரவேற்பு மற்றும் அதிக டிஆர்பி-யை அள்ளித்தரும் நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ்.
டிடிஃஎப் வாசனுக்கு எதிராக பேசும் அவினாஷ் மற்றும் ஜேசன்:
இந்த ப்ரோமோவில், டாப் 5 போட்டியாளர்கள் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் தன்னை ஒழுங்காக பேசவிடவில்லை என்றும், அவரின் அங்கீகாரம் குறித்து யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் பேசவில்லை என அவினாஷ் ஜேசனிடம் கூறியுள்ளார். உடனே ஜேசனும், தான் பேசுவது என்ன என்பது குறித்து கூட டிடிஃஎப் வாசன் கேட்கவில்லை என்றும் அவர் கூறி இருவரும் புலம்பியுள்ளனர். இது என்ன புதுசா இருக்கு.. திருந்துங்கடா அகாடமி டாஸ்கில் வாய் தகராறில் முனியம்மாள் - டிடிஃஎப் வாசன்! மேலும் ஜேசன் இதெல்லாம் பெரிதாக எடுக்கவேண்டாம், நான் உனக்காக இருக்கிறேன். இன்னும் போட்டியை சிறப்பாக ஆடு என அவினாஷுக்கு ஜேசன் ஆதரவு செய்வதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் எதிரிகளாக இருந்த இருவரும் ஓன்று சேர்ந்துவிட்டார் என இணையத்தில் மக்கள் கருத்தை பகிர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 58வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
இந்த நிகழ்ச்சியானது தற்போது 2 வாரங்களை ஒப்பிடும்போது மெதுவாகவே போகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் மாட்டுனமே இருக்கும் நிலையில், இந்த போட்டியில் கிட்டத்தட்ட 08 போட்டியாளர்களுக்கு மேல் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் உள்ளனர். ஆனால் இந்த வாரம் தீபாவளி வாரம் என்ற நிலையில், எவிக்ஷன் இருக்காது என கூறப்படுகிறது.

