Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டிரம்ப்புக்கு பின்னடைவு. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி

டிரம்ப்புக்கு பின்னடைவு. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி

TV9 Tamil 1 day ago
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) செனட் சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 3, 2026 நேற்று  நடைபெற்ற தேர்தலில் டெக்சாஸ், ஒஹையோ, அயோவா, கன்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது குடியரசுக் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தானும் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், 2026ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தல் நவம்பர் 3, 2026 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தேர்தலுக்கு உட்பட்ட இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பு குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தன் மூலம் அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் பங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இந்தத் தேர்தலில் தனது பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்றும், தானும் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டிரம்ப் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, தானே தேர்தலில் போட்டியிடுவதாகக் கருதி குடியரசுக் கட்சியினர் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் குடியரசுக் கட்சிக்குச் சாதகமாக அமையாத நிலையில், டிரம்பின் பிரசார அணுகுமுறை மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து அக்கட்சிக்குள்ளேயே விவாதங்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil