Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டூரிஸ்ட் கைடு, ஆசிரியர். நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை ஏமாற்றிய தமிழர்  - பரபரப்பு தகவல்

டூரிஸ்ட் கைடு, ஆசிரியர். நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை ஏமாற்றிய தமிழர் - பரபரப்பு தகவல்

TV9 Tamil 1 week ago
சென்னை, ஜூலை 8 : தமிழகத்தைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவர், வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டி, ஆங்கில ஆசிரியர், யோகா பயிற்சியாளர் என பல்வேறு அடையாளங்களில் நடித்து, கடந்த 36 ஆண்டுகளாக நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட ஃபைஸ்டார் ஹோட்டல்களை ஏமாற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை ஏமாற்றிய தமிழர்

கைது செய்யப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த பிங்சன் ஜான் என்பது தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், பிங்சன் ஜான் நாடு முழுவதும் உள்ள உயர்தர ஹோட்டல்களில் பல்வேறு அடையாளங்களுடன் தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். குறிப்பாக டூரிஸ்ட் கைடு, பள்ளி ஆசிரியர் மற்றும் யோகா பயிற்சியாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, ஹோட்டல் ஊழியர்களின் ஏமாற்றிய பிறகு வசதியான அறை, உணவு உள்ளிட்ட அனைத்து சொகுசு சேவைகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தாமல் வெளியேறுவதுடன், சில இடங்களில் ஹோட்டலுக்குச் சொந்தமான பொருட்களையும் எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எப்படி சிக்கினார்?

இந்த நிலையில் மேற்கு வங்கம் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஹயாத் என்ற ஹோட்டலில் கடந்த ஜூன் 2, 2026 அறை எடுத்த பிங்சன் ஜான், ஜூன் 27, 2026 அன்று முறையாக செக்அவுட் செய்யாமல் வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர் ரூ.63,755 மதிப்பிலான ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றும், ஹோட்டல் சார்பாக அவருக்கு வழங்கப்பட்ட சுமார் ரூ.1.48 லட்சம் மதிப்பிலான லேப்டாப்பையும் எடுத்துச் சென்றதாக காவல்துறையினரிடம் ஹோட்டல் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, தெலிபந்தா போலீசார் மற்றும் குற்றப் பிரிவு, சைபர் பிரிவு அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தினர். அவர் வழங்கிய ஆவணங்கள், மொபைல் எண்கள் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து, புவனேஸ்வரில் இருப்பதை கண்டறிந்து கைது செய்தனர். பின்னர், அவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் லேப்டாப்பையும் போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை இதே முறையில் ஏமாற்றியதாக பிங்சன் ஜான் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். விசாரணையில், பிங்சன் ஜான் பல்வேறு சிறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள திஹார் சிறையிலும் அவர் இருந்ததாகவும், அங்கு பல குற்றவாளிகளுடன் பழகியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் தொடர் கொலைகள் மற்றும் மோசடிகளால் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சார்ல்ஸ் சோப்ராஜின் செயல்முறைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், அதேபோல் பல்வேறு தொழில்முறை அடையாளங்களை பயன்படுத்தி ஹோட்டல் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்ததாக ராய்ப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil