Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எடப்பாடி பழனிசாமி பேசும்போதே மின்வெட்டு. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி பேசும்போதே மின்வெட்டு. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என விமர்சனம்

TV9 Tamil 1 week ago
ருமபுரி, ஆகஸ்ட் 29 : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் இது தான் தவெக ஆட்சியின் லட்சணம் என விமர்சனம் செய்தார்.
தருமபுரியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 29, 2026 இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், தவெக ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை என்றும் அப்படி இருந்தால், தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியில் இருந்து ரூ.20 லட்சம் கோடியாக மாறிவிடும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசும்போது மின்வெட்டு

மேலும் பேசிய அவர், இன்னைக்கு ஏதோ விபத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது,.ஒன்னும் கிடையாது என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து தவெக ஆட்சியில் தமிழகம் இருண்டுவிட்டது என்றார். பின்னர் ஜெனரேட்டர் உதவியுடன் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இருந்த வரை, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடடையில்லா மின்சாரம் கொடுத்தோம். இன்னைக்கு தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு. நம்ம கூட்டம் நடக்கும்போது அது நடந்துள்ளது. இதுதான் இந்த ஆட்சியுடைய லட்சணம் என விமர்சித்தார். மேலும், ஏதோ விபத்தில் தவெக இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ளது. யாரும் எதிர்பார்க்கவில்லை. கொள்கையும், ஒன்னும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமியின் பதிவு

 

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களின் பிரச்னையை பேசக்கூடிய கட்சி அதிமுகதான். ஆட்சியில் இல்லையென்றாலும் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதற்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக என்றார். தமிழக சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, சமுதாயத்தை சீரழிக்க கூடியது ஜல்லிக்கட்டு என்று தெரிவித்தது சர்ச்சையானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது எம்எல்ஏவை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. மேலும் தனது எம்எல்ஏ பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil