தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
அதன்படி, இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 62 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆரம்பம் முதல் தற்போது வரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதே போல, திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் முன்னிலை வகித்துள்ளார். இதே போல, திமுக அமைச்சரவையில் உள்ள 36 அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 31 தொகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 100 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 80 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 53 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.