சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது தான் நிலையான வைப்பு நிதி திட்டம்.
இந்த திட்டத்தில் முறையாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். ஆனால் பலருக்கும் எப்படி முறையாக முதலீடு செய்வது என தெரியவில்லை. இந்த நிலையில், எஃப்டியில் எப்படி சிறப்பாக முதலீடு செய்யலாm என பார்க்கலாம்.

எஃப்டி திட்டத்தை பொருத்தவரை வட்டி விகிதம் அதிகரிக்க அதிகரிக்க பணம் அதிகமாக வளரும். உதாரணமாக ஒருவர் ரூ.1.5 லட்சம் பணத்தை வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். அந்த திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்றால் அது மொத்தம் ரூ.2,10,382 ஆக மாறி இருக்கும்.

இதுவே ரூ.1.5 லட்சம் பணத்தை 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்டு திட்டத்தில் 8 சதவீதம் வட்டி உள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் மொத்தமாக ரூ.2,20,399 பெற்றிருப்பீர்கள். எனவே எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை சோதனை செய்வது மிக முக்கியமானதாக உள்ளது.

வட்டியை போலவே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் வட்டியை கணக்கிடும் கால அளவீடு. அதாவது, வட்டி கணக்கிடப்படும் காலவரையறை குறைய குறைய பணம் வேகமாக பெருகும். அதாவது 8 சதவீத வட்டி கொண்ட திட்டத்திற்கான பல்வேறு வித்தியாசமன வட்டி கணக்கீடு குறித்து அளவிட்டு பார்க்க வேண்டும்.

ஆண்டுக்கு வட்டி வழங்கப்படும் நிலையில், ரூ.1.5 லட்சம் முதலீடு ரூ.2,20,399 ஆக மாறியிருக்கும். அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும் நிலையில் அது ரூ.2,22,036 ஆக மாறியிருக்கும். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும் நிலையில் ரூ.2,22,892 ஆக மாறியிருக்கும். இதுவே மாதம் மாதம் வட்டி வழங்கப்படுகிறது என்றால் ரூ.2,23,476 ஆக மாறியிருக்கும்.

