Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும். 23 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டடித்த பாய்ஸ் படம்

எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும். 23 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டடித்த பாய்ஸ் படம்

TV9 Tamil 2 weeks ago
மிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாய்ஸ். பல இளம் நடிகர்களை இயக்குநர் சங்கர் அறிமுகம் செய்து வந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாய்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன், நகுல் மற்றும் எஸ். தமன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகம் ஆகி இருந்தனர். இதில் நடிகர்கள் சித்தார்த், ஜெனிலியா, பரத் மற்றும் நகுல் ஆகியோர் அதிக அளவில் படங்களில் நடித்தனர். மேலும் தமன் நடிப்பதை விட இசையமைப்பாளராக பலப் படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து பிரபல நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மேலும் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டடித்த பாய்ஸ் படம்:

இந்தப் படத்தில் சித்தார்த், பரத், எஸ். தமன், மணிகண்டன், நகுல் ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அந்த வயதிற்கே ஏற்றது போல பெண்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாகவும் ஒரு கேர்ள் ஃபரண்ட் வேணும் என்பதற்காக பல முயற்சிகளை எடுக்கிறார்கள். அந்த முயற்சியில் சித்தார்த்திற்கு நடிகை ஜெனிலியா உடன் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு எதிர்பாராத சூழலில் திருமணம் நடக்க நண்பர்கள் அனைவரும் அவர்களுடன் இணைந்து வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்று பல திட்டங்களை போடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ... ஹாய் முதல் ஒன்ஸ் மோர் வரை… கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil