இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO - Employee Provident Fund Organization) பயன்பெற்று வருகின்றனர்.
இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் சேனல் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம் பயனர்கள் தங்களது பிஎஃப் (PF - Provident Fund), இபிஎஸ் (EPS - Employee Pension Scheme) எனப்படும் பென்ஷன் திட்டம், இடிஎல்ஐ எனப்படும் ஊழியர்களின் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அனைத்து புதிய அறிவிப்புகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இந்த வாட்ஸ்அப் சேனல் பெரும் உதவியாக இருக்கும். அதுமட்டுமன்றி இபிஎஃப்ஓ சேவைகளை எப்படி பெறுவது என்பது தொடர்பான வழிகாட்டுதல் வீடியோக்களும் இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தியதா OpenAI? அதாவது, பிஎஃப் பணத்தை இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் முன்பணமாக எடுப்பது எப்படி, பிஎஃப் பணம் எடுக்க விண்ணப்பிக்கும்போது அதன் க்ளெய்ம் ஸ்டேட்டஸை சோதனை செய்வது எப்படி, என்பது உள்ளிட்ட இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் பெறும் சேவைகள் அனைத்தின் தொடர்பான செயல் விளக்க வீடியோக்களையும் சுலபமாக பெற்று பயனடையலாம்.தகவல் மற்றும் விழிப்புணர்வை வழங்கும் சேனல்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ள இந்த சேனல் முழுக்க முழுக்க தகவல் மற்றும் விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வாட்ஸ்அப் சேனலில் இதுவரை சுமார் 2 லட்சம் பயனர்கள் இணைந்துள்ளனர். இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம் சேவைகளை எப்படி பெறுவது என்ற வழிகாட்டுதல்கள் மட்டுமே கிடைக்குமே தவிர, இந்த சேனல் மூலம் எந்தவித சேவைகளையும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
