தமிழ் சினிமாவில் இருந்து மக்களிடையே பிரபலமாகி பிறகு அரசியலுக்கு வந்த தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம்.
எது தர்மம்? திருச்சியில் தவெக சார்பில் போட்டியா?
இந்த நிலையில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் முன்னதாக அரசியலுக்கு செல்ல தடை சொல்லி வந்த தனது தாய் தற்போது விஜயின் வெற்றிக்கு பிறகு ஒப்புக்கொண்டதாக வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ் மக்களாகி நீங்க சொல்லுங்க நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா என்று கேட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திய ராகவா லாரன்ஸ் மக்களை தெரு நாய்கள் உடன் ஒப்பிடுவது போல ஒரு பேச்சை பேசி இருந்தார். அந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கண்டனம் வழுத்தது. அதனைத் தொடர்ந்து தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப் பட்டது என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு வீடியோ ஒன்றை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கூறியதுடன் தான் திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் யாரை அந்த போட்டியில் நிற்கவைக்கிறாரோ அவர் நிச்சயமாக வெற்றிப் பெறுவார் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... Suriya: சூர்யா அரசியல் வருகிறாரா..? அதிரடியாக நற்பணி மன்றம் கொடுத்த விளக்கம்!இணையத்தில் வைரலாகும் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பதிவு:

