மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை(FIFA World Cup 2026) விரைவில் தொடங்க இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை, இந்த 2026ம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 நாடுகளின் கூட்டு முயற்சியில் நடைபெறுகிறது. வருகின்ற 2026ம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கும் நிலையில், 48 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தநிலையில், போட்டி முழுவதும் வீரர்களின் ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பேணுவதை நோக்கமாகக் கொண்டு, ஃபிஃபா பல புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில், இந்த 2026ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய திகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஃபிஃபா உலகக் கோப்பை எப்போது தொடக்கம்..? இந்தியாவில் எங்கு காணலாம்..?
ஃபிஃபா உலகக் கோப்பை எப்போது தொடக்கம்..? இந்தியாவில் எங்கு காணலாம்..?
2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் அமல்படுத்தப்படும் 8 புதிய விதிகள்:
- கால்பந்து அல்லது வேறு எந்த விளையாட்டிலும், வீரர்கள் தாங்கள் உதட்டசைத்துப் பேசுவது கேமராவில் பதிவாவதையோ அல்லது மற்றவர்கள் கேட்பதையோ தடுப்பதற்காக, தங்கள் கைகளால் வாயை மூடிக்கொள்வது வழக்கம். இது பெரும்பாலும் ஒரு உத்தியின் பகுதியாகவும், சில சமயங்களில் இரைச்சல் காரணமாகவும் இருந்தாலும், இந்த ஃபிஃபா உலகக் கோப்பையில் வீரர்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு செய்பவர்கள் பிடிபட்டால், நடுவர் சிவப்பு அட்டை வழங்கலாம்.
இதன் பொருள், அவர்கள் உடனடியாகப் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள், மேலும் அவர்களின் அணி 10 வீரர்களுடன் விளையாட நிர்பந்திக்கப்படும். - ஒரு அணி ஒரு வீரரை மாற்றினால், அது 10 வினாடிகளுக்குள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாற்றப்பட்ட வீரர் ஒரு நிமிடத்திற்கு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
- நடுவரின் முடிவால் கோபமடைந்து எந்தவொரு அணியும் ஆடுகளத்தை விட்டு வெளியேறினால், அந்த அணி முழுவதற்கும் சிவப்பு அட்டை வழங்கப்படும்.
- நடுவர் தவறான கார்னர் கிக் வழங்கினாலோ,அல்லது ஒரு வீரர் இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்றாலோ, VAR தலையீட்டின் மூலம் அந்த முடிவை மாற்றியமைக்க முடியும்.
- கார்னர் கிக், பெனால்டி அல்லது த்ரோ-இன் சமயத்தில், ஒரு வீரர் தரையில் விழுவதற்கு முன்பு ஃபவுல் செய்கிறாரா என்பதையும் VAR சரிபார்க்க முடியும். தற்போது, ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மட்டுமே VAR பயன்படுத்த முடியும்.
இந்தியா முதல் இங்கிலாந்து வரை.. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளின் விவரம்!
- த்ரோ-இன் அல்லது கோலின் போது கோல்கீப்பர்கள் அல்லது வீரர்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் இப்போது இதில் ஒரு கவுண்ட்டவுனும் அடங்கும். நேர வரம்பு 5 வினாடிகள் ஆகும், இதை மீறினால், எதிரணிக்கு ஒரு கார்னர் கிக் அல்லது த்ரோ-இன் வழங்கப்படும்.
- காயம் காரணமாக மருத்துவக் குழு கோல்கீப்பரைப் பரிசோதிக்கும் பட்சத்தில், அந்த நேரத்தில் டக்அவுட்டில் எந்த வீரரும் பயிற்சி ஊழியர்களிடம் பேசக்கூடாது.
- காயம் காரணமாக ஒரு வீரர் ஆடுகளத்திற்கு வெளியே இருந்தால், அவர் ஒரு நிமிடம் கழித்துதான் மீண்டும் ஆடுகளத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்.

