தமிழ் சினிமாவில் சிறப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் செல்ல அய்யாவு (Chella Ayyavu). இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி வெற்றியை பெற்றிருந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி 1 (Gatta Kusthi).
கட்டா குஸ்தி 2 படத்தில் கருணாகரனின் கதாபத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
நடிகர் கருணாகரன் ஏற்கனவே விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை என்ற படத்தில், அவரின் நண்பராக நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது கட்டா குஸ்தி 2 படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். இதில் அவர் "பார்த்தா" என்ற வேடத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் கட்டா குஸ்தி 1 படத்தில் நடித்த கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட், லிஸ்ஸி ஆண்டனி, ஸ்ரீஜா மற்றும் கஜராஜ் போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?
கட்டா குஸ்தி 2 பட நடிகர்களின் அறிமுக போஸ்டர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
இந்த கட்டா குஸ்தி 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறது. இப்படமானது வரும் 2026 ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

