Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gold : 10 கிராம் தங்கம் ரூ.15 லட்சம் வரை செல்லும்.. தாமஸ் கப்லான் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

Gold : 10 கிராம் தங்கம் ரூ.15 லட்சம் வரை செல்லும்.. தாமஸ் கப்லான் சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

TV9 Tamil 2 weeks ago

ங்கம் உலக அளவில் சிறந்த முதலீடாக உள்ள நிலையில், பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சாதாரன பொதுமக்கள் முதல் உலக பணக்காரர்கள் வரை என ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

இவ்வாறு எப்போதும் சிறந்த முதலீடாக தங்கம் இருந்து வரும் நிலையில், அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக 2020 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவே 10 கிராம் தங்கம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது தங்கம் விலை தலை சுற்ற வைக்கும் வகையில் விலை உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இவ்வாறு தங்கம் கடந்த 6 ஆண்டுகளில் கடும் விலை உயர்வை சந்தித்த நிலையில், இனி வரும் நாட்களிலும் விலை உயர்வு தொடரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், எலக்ட்ராம் நிறுவனத்தின் தலைவரும், பில்லியனருமான தாமஸ் கப்லான் தங்கம் விலை குறித்து வெளியிட்டுள்ள கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளது. 

அதாவது, அவர் தற்போது 4580 டாலர்களுக்கு விற்பனையாகி வரும் தங்கம் வரும் காலத்தில் 50,000 டாலர்களை விற்பனையானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என கூறியுள்ளார். அதாவது, தங்கம் தற்போது உள்ளதை விட 10 மடங்கு விலை உயர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். 

தாமஸ் கப்லான் கூறியபடி தங்கம் ஒரு அவுன்ஸ் 50,000 டாலர்களாக உயரும் பட்சத்தில், டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு ரூ.95 என எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும். தாமஸ் கப்லானின் இந்த கருத்து நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil