சென்னை, ஜூலை 09 : ஜூலை மாத தொடக்கத்தில் ஒருசில நாட்கள் தங்கம் விலை (Gold Price) உயர்வை சந்தித்த நிலையில், அதன் பிறகு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை - காரணம் என்ன?
ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாத தொடக்கத்தில் ஒருசில நாட்கள் உயர்வை சந்தித்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்திக்க தொடங்கியது. அதாவது, ஜூலை 03, 2026 அன்று முதலே தங்கம் சரிவை சந்தித்து வருகிறது. தங்கம் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பட்சத்தில் ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பர்ப்பு எழுந்துள்ளது. மீண்டும் போர் பதற்றம்… கச்சா எண்ணெய் விலை சர்ரென அதிகரிப்புஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,222-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
